மேலும் செய்திகள்
வேதாந்த தேசிகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
05-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடைசியாக 2012ம் ஆண்டு, ஜூலை மாதம், 5ம் தேதி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, தமிழக அரசின், 2023 - -24ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி, வரதராஜ பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, முதற்கட்டமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜ கோபுரம், கோவில் வளாகத்தில் உள்ள உடையவர் சன்னிதி, பெரியாழ்வார் சன்னிதியில் திருப்பணியை துவக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து கோவிலில் திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதில், உடையவர் சன்னிதி, 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழுது பார்த்து புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து, நாளைமறுதினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று, காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு கும்ப ஆராதனம், யாகசாலை, மஹா பூர்ணாஹூதி கும்ப புறப்பாடு நடக்கிறது. காலை 8:30 மணியில் இருந்து, 9:30 மணிக்குள் உடையவர் சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
05-Apr-2025