கோவிலில் விளக்கு பூஜை
காஞ்சிபுரம்:நவராத்திரி விழாவையொட்டி உலக நன்மைக்காக காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று முன்தினம், மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை, உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை நடந்தது.