சிதிலமடைந்த மின்கம்பத்தை கட்டு போட்டு பாதுகாக்கும் பகுதிவாசிகள்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, பாடிச்சேரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கிளாய் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதடைந்து சிமென்ட் காரை உதிர்ந்து உள்ளது.இரும்பு கம்பிகள் தெரியும் நிலையில் உள்ள மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படாமல் இருக்க, அப்பகுதியினர் சேதமடைந்த மின் கம்பத்தில், கயிறு மற்றும் கம்பினால் கட்டி பாதுகாத்து வைத்துள்ளனர்.அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள், மின் கம்பத்தை எதிர்பாராத விதமாக தொடும் போது, மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மின் வாரிய அதிகாரிகள் சேதமான மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.