மேலும் செய்திகள்
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
03-Jan-2025
ஆவடி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகை செல்வன், 30. இவர், நேற்று அதிகாலை, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து சிப்காட் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிற்சாலைக்கு கார் உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றார்.ஆவடி அடுத்த மோரை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் லாரியை முந்த முயன்றது. கார் மீது மோதாமல் இருக்க, கார்த்திகை செல்வன் லாரியை வலதுபுறம் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் கார்த்திகை செல்வன் காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், இரண்டு மணி நேரம் போராடி 'கிரேன்' உதவியுடன் லாரியை மீட்டனர்.வெளிவட்ட சாலையில் மின் விளக்குகள் சரியாக எரியாததும், சாலையோர தடுப்புகள் அமைக்காததும் தான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
03-Jan-2025