உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்டலம் கிராம மக்கள் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்டலம் கிராம மக்கள் அவதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, தண்டலம், புள்ளலுார், கோவிந்தவாடி, கொட்டவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.குடியிருப்பு, விவசாயம், தெரு விளக்கு, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு மின்சாரம் அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.இதில், தண்டலம் பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், குறைந்த மின்னழுத்தத்துடன் வினியோகிக்கப்படுகிறது.இதனால், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாமல், அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவதிபடுகின்றனர்.எனவே, தண்டலம் கிராமத்தில், குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை