உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

காஞ்சி நகரீஸ்வரர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில, நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரப்பில் உள்ள இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.மஹா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.இன்று, காலை 8:00 மணிக்கு, விசேஷ திரவ்ய ஹோமம் நடைபெற உள்ளது.நாளை, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை