காஞ்சி சக்தி விநாயகர் கோவிலில் வரும் 30ல் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவலான்கேட் சக்தி விநாயகர் கோவிலில், வரும் 30ம் தேதி, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் காவலான்கேட் அறம்வளத்தீஸ்வரர் கோவில் சின்ன தெருவில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. வரும் 28ம் தேதி, காலை 8:30 மணிக்கு, திருஞான கதிர்வேல் சுப்பிரமணியன் ஓதுவா மூர்த்திகள் குழுவினரின் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு மாஸ்டர் கிருஷ்ணா புதிய குழுவினரின் பக்தி கிராமிய நடன கலை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆதியின் விமலாசத்யா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 30ம் தேதி, காலை 8:30 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு காஞ்சிபுரம் பம்பை, உடுக்கை, காவடி கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்கம் சார்பில், கைச்சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது.