உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம்,செங்கழுநீரோடை வீதி, கிழக்கு பகுதியில் தர்மராஜர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், கணபதி அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை துவங்கியது.கும்பாபிஷேக தினமான நாளை, காலை 8:30 மணிக்கு குடம் புறப்பாடும், தொடர்ந்து9:00 மணிக்கு கோவில் கோபுர விமானம், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ