உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி, அழிசூர் கோவில்களில் நாளை மஹா கும்பாபிஷேகம்

காஞ்சி, அழிசூர் கோவில்களில் நாளை மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில, நகரீஸ்வரர்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரப்பில் உள்ள இக்கோவில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.இன்று, காலை 8:00 மணிக்கு, விசேஷ திரவ்ய ஹோமம் நடைபெற உள்ளது.நாளை, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூரில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவில் கட்டட பகுதிகள் சிதிலமடைந்ததை அடுத்து, கோவிலை புதிய வடிவில் கட்டமைக்க பகுதியினர் தீர்மானித்தனர்.அதையடுத்து, ராஜகோபுரம் மற்றும் மண்டபத்துடன்கூடிய கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இக்கோவில் திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நாளை, மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் புதிய சிலைகள் மற்றும் விமான கலசங்களுக்கான கரிக்கோலம் ஊர்வலம் நடைபெற்றது.நேற்று காலை, மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் புதிய சிலைகள் கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நாளை, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசங்கள் மற்றும் திரவுபதி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி