உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஹா ஸ்வாமிகள் வார்ஷிக ஆராதனை வரும் 26ல் தெப்போற்சவம் துவக்கம்

மஹா ஸ்வாமிகள் வார்ஷிக ஆராதனை வரும் 26ல் தெப்போற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடம் 68வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை விழா மஹோற்சவம், வரும் 27ல் நடைபெறுகிறது.இதையொட்டி, தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில், இன்று முதல் நாளை மறுநாள் வரை, தினமும் காலை 7:00 மணிக்கு ஸ்ரீமஹா ருத்ர ஜபம், காலை 11:30 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு மந்திரபுஷ்பமும் நடைபெறுகிறது.வரும் 26ம் தேதி காலை 7:30 மணிக்கு மஹா ருத்ர ஹோமமும், மதியம் 12:00 மணக்கு பூர்ணாஹூதியும், வரும் 27ம் தேதி பிரும்மபுரீஸ்வரர், மஹா சுவாமிகளுக்கு மஹாருத்ர கலச அபிஷேகமும், காலை 9:00 மணிக்கு மஹா ஸவாமிகளின் 31வது ஆராதனை மஹோத்ஸவமும், மதியம் 1:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும் நடைபெறுகிறது.இதில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 மணிக்கு சிவாஸ்தானத்தில் உள்ள ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஸமேத பிரும்மபுரீஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிவன், பார்வதி, விநாயக பெருமான், மஹா ஸ்வாமிகள் ஆகியோர் எழுந்தருளி பவனி வருகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்ரீசங்கர பக்த ஜன சபா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ