மேலும் செய்திகள்
டேக் வாண்டோ போட்டி காஞ்சி வீரர்களுக்கு 28 பதக்கங்கள்
34 minutes ago
லிப்ட் கொடுத்து வழிப்பறி செங்குன்றம் வாலிபர் கைது
36 minutes ago
கொலை வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு
44 minutes ago
மண்டலாபிஷேகம் நிறைவு விழா
45 minutes ago
கோயம்பேடு: இரண்டு ஆம்னி பேருந்துகள் வாங்கி, பணம் தராமல் ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தாஜுதீன், 38. இவர், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2024ல் இவருக்கு சொந்தமான இரண்டு ஆம்னி பேருந்துகளை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சுபராஜன், 31, என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, 19.25 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, இரண்டு ஆம்னி பேருந்துகளை 38.50 லட்சம் ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போட்டுள்ளனர். சுபராஜன் முன்பணமாக 6.50 லட்சம் கொடுத்து, இரண்டு ஆம்னி பேருந்துகளையும் எடுத்து சென்றார். ஆனால், மீதி தொகையை தராமலும், மொபைல் போன் அழைப்பை ஏற்காமலும், தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், முகமது தாஜுதீனின் பேருந்து கரூரில் இருப்பது தெரிய வர, கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கரூர் போலீசார் விசாரித்து ஒரு பேருந்தை மீட்டு கொடுத்தனர். தலைமறைவாக உள்ள சுபராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த சுபராஜனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றொரு ஆம்னி பேருந்தை, சுபராஜன் அவரது நண்பருடன் சேர்ந்து, நண்பரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் இயக்கி வருவதும் தெரியவந்தது. பேருந்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
34 minutes ago
36 minutes ago
44 minutes ago
45 minutes ago