உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது பாட்டில்கள் விற்றவர் கைது

மது பாட்டில்கள் விற்றவர் கைது

உத்திரமேரூர்:காரணை கிராமத்தில் மதுபாட்டில்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மானாம்பதி, காரணை, காரணி மண்டபம், களியாம்பூண்டி ஆகிய பகுதிகளில், எஸ்.ஐ., கேசவலு மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, காரணை கிராமத்தில் உள்ள சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல், 33;; என்பவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, அவர், அரசு அனுமதியின்றி 26 மது பாட்டில்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, தங்கவேல் மீது வழக்கு பதிந்து கைது செய்து, 26 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ