உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்;சுங்குவார்சத்திரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைத்தடுமாறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 21. மப்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 'யமஹா' இருசக்கர வாகனத்தில் தக்கோலத்தில் இருந்து பேரம்பாக்கம் சென்றார். தண்டலம் -- பேரம்பாக்கம் சாலையில் பிச்சிவாக்கம் அருகே சென்ற போது, எதிர்பாரத விதமாக நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து விழுந்தார். இதில், தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி