உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டு மனை பட்டா கேட்டு மணஞ்சேரி கிராமத்தினர் தர்ணா

வீட்டு மனை பட்டா கேட்டு மணஞ்சேரி கிராமத்தினர் தர்ணா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில், நேற்று நடந்தது.இதில், பட்டா, ரேஷன் அட்டை, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் என, பல்வேறு கோரிக்கை மனுவுடன், 415 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் இரு பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனை பட்டாவும், நான்கு பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஒருவரும் மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ - மாணவியர், கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கு வெளியே, வீட்டு மனை பட்டா வழங்க கோரி, குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட மணஞ்சேரி கிாமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை இல்லை என, முறையிட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என, போலீசார் தெரிவித்தனர்.இருப்பினும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டரங்கில், தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளித்த பின், பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பட்டா இல்லாமல் சிரமப்படுவதாக கூறியதை தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திலிருந்து கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை