உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை இல்லாத மஞ்சமேடு கூட்டுச்சாலை

நிழற்குடை இல்லாத மஞ்சமேடு கூட்டுச்சாலை

வாலாஜாபாத்,வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் கட்டவாக்கம் அடுத்து மஞ்சமேடு கூட்டுச்சாலை உள்ளது. மஞ்சமேடு, அகரம், அளவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து வாலஜாபாத், காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர்.மஞ்சமேடு கூட்டுச்சாலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் மாணவ -- மாணவியர், தொழிலாளர் உள்ளிட்ட பல தரப்பினரும் மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிபடுகின்றனர்.எனவே, மஞ்சமேடு கூட்டுச்சாலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ