உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாயில் சாணக்கழிவு எழிச்சூரில் சுகாதார சீர்கேடு

வடிகால்வாயில் சாணக்கழிவு எழிச்சூரில் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், எழிச்சூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தவிர, ஊராட்சி அலுவலகம், நுாலகம் உள்ளிட்டவை அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இந்த தெருவில் மாடுகளை வைத்திருப்பவர்கள் தங்களின் மாடுகளை, துர்க்கை அம்மன் கோவில் தெரு சாலையில் கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர்.இதனால், மாடுகளின் சாணம் அருகே உள்ள வடிகால்வாயில் குவிந்து உள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. தவிர, பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர், நோய் தொற்று பரவும் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.வடிகால்வாயில் குவிந்துள்ள மாட்டு சாணக் கழிவால் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது தேங்கி வருகிறது. குறிப்பாக, மழை பொழியும் போது, கால்வாயில் நீர் செல்ல வழியின்றி, வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வடிகால்வாயில் சாணக்கழிவு கொட்டுவதை தடுத்து, துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை