மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உத்திரமேரூர் வட்ட கிளை சார்பில், வட்ட செயலர் விநாயகமூர்த்தி தலைமையில், உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் நேரு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இந்திய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் முறைகேடு செய்ததாக அதானி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட நிர்வாகிகள்,பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.