உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர்கள் பழுது பார்க்கும் நிலையமாக மாறிய மாத்துார் சர்வீஸ் சாலை

டூ - வீலர்கள் பழுது பார்க்கும் நிலையமாக மாறிய மாத்துார் சர்வீஸ் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.இந்த சாலை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் - வடகால் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கப்பெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அடுத்த, மாத்துார் பகுதியில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் இடையூறாக உள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை