மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்
14-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், உலக நிமோனியா தினத்தையொட்டி மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் வடக்கு மண்டல நுண்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்களுக்குப் பாராட்டு விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்றார். வேலுாரில் நடந்த இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில வடக்கு மண்டல நுண்கலைப் போட்யில் வெற்றி பெற்ற 16 மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.சமீபத்தில் இறந்த சங்க உறுப்பினர்கள் பேராசிரியர் டாக்டர் ச.நமச்சிவாயம், டாக்டர் ஆர்.முரளி மற்றும் முன்னாள் உதவி செயலர் டாக்டர் கோ. சீனிவாசன் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் சிறப்பு இதய நோய் மருத்துவ வல்லுனர் டாக்டர் எஸ்.தீபக் சந்த் ராஜா, ‛இதய தாளக் கோளாறுகளுக்கான மின்னுடலியங்கியல் தீர்வுகள்' என்ற தலைப்பிலும், சிறப்புப் புற்றுநோய் மருத்துவ வல்லுனர் டாக்டர் பி. சுரேஷ்பாபு, 'புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையில் அண்மை முன்னேற்றங்கள்' என்ற தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினர்.
14-Oct-2024