மேலும் செய்திகள்
தொடர் மருத்துவ கருத்தரங்கம்
27-Oct-2025
காஞ்சிபுரம்: இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை, நோவா கருத்தரித்தல் மையம் சார்பில், கர்ப்பிணியருக்கான பரிசோதனைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை தலைவர் ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிதா நளினி கர்ப்பிணியருக்கு செய்யக்கூடிய பரிசோதனைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து கருத்தரங்கில் உரையாற்றினார். மகப்பேறு தலைமை மருத்துவர் கிருஷ்ணகுமாரி, மருத்துவர்கள் பிரியா, அனிதா ஆகியோர் மகப்பேறு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர். நோவா கருத்தரித்தல் மையத்தின் இயக்குநர் கிருத்திகா தேவி புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானோர் எவ்வாறு கருத்தரிப்பது குறித்து பேசினார். இதில், 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
27-Oct-2025