புலிப்பாக்கத்தில் பால்குட ஊர்வலம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான வசந்த கால உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.முன்னதாக, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு நெல், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் கங்கையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக மாட வீதி வழியாக திரவுபதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.பின், பக்தர்கள் வரிசையாக நின்றவாறு அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், பகல் 1:30 மணிக்கு, தேன்சுவை சொல்லரசி அழகானந்தல் புனிதவதியின் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.