உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு

மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு

உத்திரமேரூர்:மாயமான தனியார் தொழிற்சாலை காவலாளி, காட்டுகொல்லை நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 48; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல, சாத்தமை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வரவேண்டியவர், இரவு 9:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில், தேவேந்திரன் காட்டுகொல்லை கிராமத்தில், பாப்பநல்லுார் செல்லும் சாலையோரம் உள்ள, நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில், இரவு 9:30 மணிக்கு, இறந்த நிலையில் மீட்கப்பட்டார். உத்திரமேரூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை