மேலும் செய்திகள்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் 16ல் போராட்டம் துவக்கம்
12-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.இக்குழுவிற்கு, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க.,- எம்.பி., பாலு தலைவராக உள்ளார். அனைத்து துறையிலும், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முன்னேற்ற அறிக்கை பற்றி கேள்விகள் எழுப்பப்படும்.ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இக்கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, 5 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கான முதல் கூட்டம் இன்னும் நடைபெறாமல் உள்ளது.கடந்த வாரம் இக்கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மழை காரணமாக கூட்டம் நடத்தும் முடிவு கைவிடப்பட்டது. அக்டோபர் மாதமாவது இக்கூட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
12-Oct-2024