தேங்கி நிற்கும் மழைநீரால் கோனேரியில் கொசு தொல்லை
காஞ்சிபுரம்:கோனேரிகுப்பம் ஊராட்சி, எச்.எஸ்., அவென்யூவில் காலிமனையில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எச்.எஸ்., அவென்யூவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் காலிமனையில் குட்டைபோல மழைநீர் தேங்கிஉள்ளது.இதனால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, காலிமனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எச்.எஸ்., அவென்யூவினர் வலியுறுத்தி வருகின்றனர்.