ஊத்துக்காடு சாலையோரம் மண் குவியலால் வாகன ஓட்டிகள் அச்சம்
வாலாஜாபாத், வாலாஜாபாதில் இருந்து, வாரணவாசி, தேவேரியம்பாக்கம் வழியாக ஒரகடம் செல்லும் சாலை உள்ளது. வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், இச்சாலையை பயன்படுத்தி, ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையோரங்களின் இருபுறமும் மண் துகள் குவிந்து காணப்படுகிறது. இதனால், லாரி, வேன் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட்டு, சாலையோரம் ஒதுங்கி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகன சக்கரங்கள் மண்ணில் சிக்கி அவ்வப்போது விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக இச்சாலையோர மண் துகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர்.எனவே, வாலாஜாபாத் - ஒரகடம் சாலையோரங்களில் குவிந்துள்ள மண்னை அகற்றி விபத்துகளை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.