உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரத்தில் நெற் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரத்தில் நெற் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கட்டவாக்கம், தென்னேரி, மஞ்சமேடு, குண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது நவரை பருவத்திற்கான நெல் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவடை செய்யும் நெல்லை அப்பகுதி விவசாயிகள், சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே கொட்டி குவியில் போட்டு வைக்கின்றனர். இதனால், இச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையில் கொட்டப்பட்டுள்ள நெற் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !