உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் அரிப்பினால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மண் அரிப்பினால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலை உள்ளது. இப்பகுதி மக்கள் வேலை மற்றும் பிற தேவைகளுக்காக இந்த சாலையை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தவிர, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தின் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த சாலையில், பேரீஞ்சம்பாக்கம் - வளத்தாஞ்சேரி இடையே உள்ள சிறுபாலத்தின் அருகே, சமீபத்தில் பெய்த மழையால், மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.இதனால், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.எனவே, மண் அரிப்பினால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரீஞ்சம்பாக்கம் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை