மேலும் செய்திகள்
தடுப்பு இல்லாத வளைவு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
19-Jan-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் புத்தளி கிராமத்தில் இருந்து இருமரம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக நெய்யாடுபாக்கம், காவாம்பயிர், வயலாக்கவூர், மலையாங்குளம் உள்ளிட்ட கிராமத்தினர் உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருப்புலிவனம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையின் குறுக்கே மலையாங்குளம் நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, இந்த பாலத்தில் இருபுறமும் உள்ள தடுப்புகள் சேதமடைந்து உள்ளது.இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்துள்ள தடுப்புகளை சீரமைத்து, போக்குவரத்து எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, பாலத்தில் போதிய தடுப்புகளை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Jan-2025