மேலும் செய்திகள்
சுக்கிரவார்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச் சுவர்
01-Dec-2024
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில் இருந்து, வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாயின் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலத்திற்கு முழுமையாக தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ள பில்லர்களும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தெரு மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதியில், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலை தடுமாறி சிறுபாலத்தின் பக்கவாட்டு பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சிறுபாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
01-Dec-2024