உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் பள்ளி வாகனங்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையோரம் பள்ளி வாகனங்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெரு வழியாக பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு, வணிகர் வீதி, ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், தனியார் பள்ளி வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நரசிங்கராயர் தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை