உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்த தொழிற்சாலை வாகனங்கள் ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி

சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்த தொழிற்சாலை வாகனங்கள் ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் டிராக்டர், டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுகிறது.மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, சாலை முழுதும் ஆக்கிரமித்து நிறுத்தியுள்ள வாகனங்கள், சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.எனவே, சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, சிப்காட் வாகன நிறுத்த முனையத்தில் நிறுத்த, போலீசார் நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை