உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரைகுறையாக விடப்பட்ட சிறுபாலம் கண்ணந்தாங்கலில் வாகன ஓட்டிகள் அவதி

அரைகுறையாக விடப்பட்ட சிறுபாலம் கண்ணந்தாங்கலில் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் கண்ணந்தாங்கள் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், நான்கு மாதத்திற்கு முன், தத்தனுார், கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு சாலைகள் சந்திக்கும் கண்ணத்தாங்கல் சந்திப்பில் சிறுபாலம் கட்டப்பட்டது.இந்த நிலையில், சிறுபால பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தின் மீது சாலை சீரமைக்கப்படவில்லை. கட்டுமான பணிக்காக கொட்டப்டட ஜல்லி பாலத்தின் மீது குவிந்து உள்ளன.இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட சிறுபாலத்தின் மீது, தார் ஊற்றி, சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி