சாலை வளைவில் பள்ளம் தடுமாறும் வாகன ஓட்டிகள்
குன்றத்துார்:குன்றத்துார் - -ஸ்ரீபெரும்புதுார் சாலையை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், சிறுகளத்துார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலை வளைவு உள்ளது.இங்கு சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. இந்த சிறுபாலத்தின் மேல்புறம் சேதமாகி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கவில்லை.இதனால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மரக்குச்சிகளை அந்த பள்ளத்தின் மீது வைத்துள்ளனர்.சாலை வளைவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் மற்றும் மரக்குச்சியால் நிலைத்தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.எனவே, இந்த சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.