உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை மூடி மீண்டும் சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பாதாள சாக்கடை மூடி மீண்டும் சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பாதாள சாக்கடை மூடியை மீண்டும் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடில் பல்வேறு தெருக்களில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த முதற்கட்டமாக கான்கிரீட் தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, சின்னவேப்பங்குளக்கரை சாலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடி அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. பணி முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடி பெயர்ந்து, அப்பகுதி சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி