உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, எண்டத்துார் சாலை, புக்கத்துறை சாலை, மானாம்பதி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த பிரதான சாலைகளை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், உத்திரமேரூருக்கு வந்து செல்கின்றன. அதேபோல், உத்திரமேரூரில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு டூ-- வீலரில் தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், உத்திரமேரூரில் உள்ள பிரதான சாலையோரங்களில் சமீப நாட்களாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதில், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைக்கு முன் கொட்டகை அமைத்தும், கடையின் பெயர்ப்பலகை வைத்தும் வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி நிர்வாகத்தினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே, உத்திரமேரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை