உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் சுவரோவிய மரபு பயிலரங்கம்

காஞ்சியில் சுவரோவிய மரபு பயிலரங்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் 'கேரள சுவரோவிய ஓவிய மரபு' குறித்த பயிலரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். கேரள மாநில சுவரோவிய கலைஞர் ஸ்ரீசரண் தாஸ், கேரள சுவரோவியம் எவ்வாறு வரைவது, இயற்கை வர்ணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என, பயிற்சி அளித்தார். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இருந்து வந்த ஓவியர்கள் பயிற்சி பெற்றனர். இந்திய பாரம்பரிய ஓவிய மரபுகள் குறித்தும், மரபுகளைப் பாதுகாத்து ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் குறித்து ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மைய பேராசிரியர் அண்ணாதுரை பேசினார். பயிலரங்கில் பங்கேற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. காஞ்சி க்ஷேத்திர கலா மந்திர் நாட்டிய பள்ளி மாணவி செல்வி சஞ்சனாவின் 'காஞ்சிபுரம் பாணி பரதநாட்டிய நிகழ்ச்சி' நடந்தது. தமிழ்நாடு அருங்காட்சியகங்கள் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட காப்பாட்சியர் உமாசங்கர், காஞ்சிபுரம் ஓவியர் சந்தானகுமார், பேராசிரியர் முனைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ