உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய பெண் குழந்தைகள் தின விழா

தேசிய பெண் குழந்தைகள் தின விழா

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ‛ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, குரூப்போ ஆண்டாலின் சி.எஸ்.ஆர்., திட்டத்தின் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தின விழா, பெற்றோர் கூட்டம், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் வேலு, தலைமையாசிரியர் மலர்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். ‛ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' முதன்மை மேலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் பார்வதி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை