அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றாமல் அலட்சியம்
காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும் அரசு பொது இடங்களில் ஏராளமான அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளன. மேலும், அரசியல் கட்சியின் கட்டிய கல்வெட்டுகளும் பல இடங்களில் உள்ளன.இந்த கொடிகம்பங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொடி கம்பங்களை அகற்றி வருவதாக, தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்ததுடன், அதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல அரசியல் கட்சி கொடி கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. பொது இடங்களில், நகரவாசிகளுக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற நகரவாசிகளும் வலியுறுகின்றனர்.காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு, ஓரிக்கை என, பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி கல்வெட்டு, கொடி கம்பங்கள் அகற்றாமல் உள்ளன. அதை, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.