உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  டி.ஆர்.ஓ., ரத்து செய்த பட்டாவை தாசில்தார் செயல்படுத்துவதில் அலட்சியம்

 டி.ஆர்.ஓ., ரத்து செய்த பட்டாவை தாசில்தார் செயல்படுத்துவதில் அலட்சியம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, திம்மராஜம்பேட்டை ஊராட்சி, மதுரா சீயமங்கலம்பேட்டை கிராமத்தில், 5.65 ஏக்கர் நிலம், அதே கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்குரியது.இந்த இடத்தை, நெசவாளர்கள் பாவு போடுவதற்கு பயன்படுத்தி வந்தனர். இதில் கிடைக்கும் வருவாயை, கோவில்களின் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் நீதிமன்றம், பல ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், இந்த இடத்தை, எட்டு பேர் அடங்கிய சங்க நிர்வாகிகள், ஆறு பேர் பெயரில், போலி ஆவணங்கள் தயாரித்து, பெண் மண்டல துணை வட்டாட்சியர் உதவியோடு, பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளனர்.தானப்பத்திரம் என்ற பெயரில், 2015ம் ஆண்டு கணிசமான தொகை பெற்றுக் கொண்டு, வீட்டுமனைகளை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே விற்றுள்ளனர்.மேலும், கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், வெளி நபருக்கு சந்தை மதிப்பை விட குறைவான தொகைக்கு கைமாறி உள்ளது.இந்த இடத்தை, சமூக மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என, சிலர் போர்க்கொடி துாக்கினர்.இதையடுத்து, குறிப்பிட்ட சமூகத்திற்குரிய நிலம் தொடர்பாக, மேல் முறையீடு வழக்கு, காஞ்சிபுரம் சப் - கலெக்டரிடம் வந்துள்ளது. விசாரணை முடியும் வரை, பட்டா பெயர் மாற்றம் மற்றும் பிற பதிவுகள் செய்யக்கூடாது என, அப்போதைய, சப் - கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட பதிவாளருக்கு அறிவுரை வழங்கினார்.இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 22ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, பட்டா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.இதில், பட்டா மாற்றம் செய்ய பத்திரப்பதிவு ஆவணங்கள் சரியாக இல்லை மற்றும் பத்திரம் மெய்த்தன்மை உள்ளதா என, மண்டல துணை தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோர் கண்காணிக்க தவறி உள்ளனர்.மேலும், பட்டா மாறுதலுக்கு முன் இருந்த நிலையில் இருக்க வேண்டும் என, காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ., சிவருத்ரய்யா உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு, நேற்று முன்தினம் வரையில் அமல்படுத்தவில்லை என, காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், உதயசந்திரன் என்பவர் மனு அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை