உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு நாய் தொல்லை அதிகரிப்பு அச்சத்தில் நெமிலி மக்கள்

தெரு நாய் தொல்லை அதிகரிப்பு அச்சத்தில் நெமிலி மக்கள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், நெமிலி ஊராட்சியில், 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள தெருக்களில் கூட்டமாக திரியும் நாய்களால், இப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.சாலையில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும் போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குளாகி வருகினறனர்.அதேபோல, வாகனங்களில் செல்வோரையும் துரத்தி கொண்டு ஓடுவதால், வாகன ஓட்டிகள் நிலைக்குலைந்து, எதிரே வரும் வாகனங்ளின் மீது மோதி விபத்தில் சிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால், தெருக்களின் விளையாடும் குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியர் அச்சத்தில் உள்ளனர்.எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என, நெமிலி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி