உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மணவாள பெருமாளுக்கு புதிய கருடவாகனம்

மணவாள பெருமாளுக்கு புதிய கருடவாகனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2022 ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. சுவாமி வீதியுலா செல்வதற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த பெருமாள் பக்தர் டி.வி.சங்கர் என்பவர் ஐந்தடி உயரமும், நான்கு அடி அகலம் கொண்ட அத்திமரத்தால் செய்யப்பட்ட புதிய கருட வாகனத்தை கோவில் அறங்காவலர் அமரேசனிடம் உபயமாக வழங்கினார்.கோவிலுக்கு புதிதாக வழங்கப்பட்ட கருடவாகனத்தின் கரிகோலம் நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. இதில், பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு ஏரிவாய், முத்தியால்பேட்டை பகுதியில் முக்கிய வீதி வழியாக உலா வந்த கருடவாகனத்திற்கு வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அழகிய மணவாள பெருமாள் புதிய கருடவாகனத்தில் எழுந்தருளி உலா வருவார். மேலும், மாதந்தோறும் விசேஷ நாட்களிலும், பெருமாள் கருட வாகனத்தில் வீதிஉலா வருவார் என, கோவில் அறங்காவலர் அமரேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !