மேலும் செய்திகள்
கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
25-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1.000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வந்தனர்.எனவே, புதிய வகுப்பறை கட்டடங்களை கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதியாண்டில், நபார்டு திட்டத்தின் கீழ், 2.82 கோடி ரூபாய் மதிப்பில், 12 வகுப்பறை கட்டடம் கட்டும் பணியின் துவக்க விழா நேற்று நடந்தது.மானாம்பதி ஊராட்சி தலைவர் ராதா தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, புதிய கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். அதேபோல், உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 5.65 கோடி ரூபாய் மதிப்பில், 24 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணியும் துவக்கப்பட்டது.காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர் சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
25-Jan-2025