உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் அளவீடு எல்லைக்கல் நட்ட அதிகாரிகள்

 காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் அளவீடு எல்லைக்கல் நட்ட அதிகாரிகள்

காஞ்சிபுரம்: ஆக்கிரமிப்பில் இருந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, அப்பகுதியில் அளவீடு எல்லை கற்களை நட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம், காஞ்சி சர்வதீர்த்த குளம் அருகே திருமலைராயன் தோட்டத்தில் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த இடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் குமரதுரை தலைமையில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, சரக ஆய்வாளர் அலமேலு ஆகியோர் முன்னிலையில் ஹிந்து அறநிலையத்துறையின் நில அளவையர் குழுவினர் நேற்று அளவீடு செய்தனர். தொடர்ந்து கோவில் இடம் என்பதை உறுதி செய்து, மூன்று இடங்களில் அளவீடு எல்லை கற்களை நட்டனர். ஆக்கிரமிப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை