மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
59 minutes ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
1 hour(s) ago
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி, 42. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜன்டாக செயல்பட்டு, பலரிடம் பணத்தை பெற்று தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம், 30ம் தேதி மர்ம நபர்கள் நான்கு பேர் காரில் வந்து, வெங்கடமுனியை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மறுநாளே, கடத்தலில் ஈடுபட்டிருந்த, சந்தான கோபாலபுரம் சேர்ந்த, கார்த்திக், 34, நிர்மல்குமார் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.மேலும், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பகுதியைச் சேர்ந்த பாபு மகன் துரைபாண்டியன், 21, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே பதுக்கியிருந்த துரைபாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
59 minutes ago
1 hour(s) ago