மேலும் செய்திகள்
லஞ்ச வி.ஏ.ஓ., கைது
02-Oct-2024
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவர், காஞ்சிபுரம் கதர் கிராம தொழில்கள் அலுவலகத்தில், பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் பெற, கடந்த 2008ல் மனு அளித்தார்.இந்த அலுவலகத்தில், தேனீ பிரிவுக்கான பீல்ட் ஆபிசராக பணியாற்றி வந்த சக்கரை என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, மனு மீது நடவடிக்கை எடுக்க, 1,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என, சக்கரை கேட்டுள்ளார்.லஞ்சம் தர மறுத்த ஜான், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, 2009 ஜனவரி 7ம் தேதி, லஞ்ச பணம் 1,000 ரூபாயை சக்கரை பெற்றபோது, போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம் நிருபிக்கப்பட்டதால், கைது செய்யப்பட்ட சக்கரை என்பவருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி வசந்தகுமார் உத்தரவிட்டார்.
02-Oct-2024