உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு, கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோபூஜை யும், தொடர்ந்து, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தனுர்மாத பூஜை, நித்யபடி, சாத்துமுறை, சொர்க்கவாசல் துவார பாலகர் துவார பூஜை நடந்தன. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்க வாசல் வழியாக உற்சவர் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். தீப ஆராதனைக்குப்பின், திவ்ய பிரபந்தம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்ட தோட்ட மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 2:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும் நடந்தது. விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நேற்று காலை ரத்தின அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:30 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு மாட வீதி புறப்பாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். சாற்றுமறை நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா வேணு கோபால சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசலில், வேணுகோபாலன் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் உள்ள கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு உற்சவர் மணவாள பெருமாள் கருட வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார். மூலவர் அழகிய மணவாள பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தில், வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை, 4:00 மணிக்கு சொர்கவாசல் திறப்பு மற்றும் காலை 4:30 மணிக்கு கருட சேவை உத்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு கருட வாகனத்தில்வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். மாலை, 6:00 மணி அளவில், அனுமந்த சேவை நடந்தது. ராணிபேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில், சீனிவாசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை, 4:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு சீனிவாசப்பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ