செவிலியர் பயிற்சி மையம் திறப்பு
பரந்துார்:பரந்துார் ஆரம்ப சுகாதாரமையத்தில், சங்கரா செவிலியர் பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. நிர்வாக அறங்காவலர் பம்மல் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், சங்கரா செவிலியர் பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார்.பரந்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன், உட்பட பலர் பங்கேற்றனர்.