உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தடுப்பில்லாத திறந்த வெளி கிணறு மின் இணைப்பு துண்டிக்க உத்தரவு

 தடுப்பில்லாத திறந்த வெளி கிணறு மின் இணைப்பு துண்டிக்க உத்தரவு

காஞ்சிபுரம்: சாலை ஓரம் திறந்தவெளி கிணறுகள் மீது தடுப்பு ஏற்படுத்தாத விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் தடுப்பு ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில், உத்திர மேரூர் ஒன்றியத்தில் மட்டும் 18 திறந்தவெளி கிணறுகள்; குன்றத்துார் ஒன்றியத்தில் ஏழு என, விவசாயிகளின் நிலங்களை ஒட்டி உள்ள 31 கிணறுகள் மீது தடுப்பு ஏற்படுத்தவில்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இந்த வாகன ஓட்டிகளின் நலன் கருதி திறந்தவெளி கிணறுகள் மீது, தடுப்பு கம்பி அமைக்காத விவசாயிகளின் நிலங்களில் மின் இணைப்பு துண்டிக்க மின் வாரியத்திற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று, மின் வாரியம் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் வாரிய கோட்டப்பொறியாளர் ஒருவர் கூறியதாவது: கலெக்டர் உத்தரவு படி மின் இணைப்பு துண்டித்து வருகிறோம். விவசாய நிலத்தில் சாலை ஓர கிணறு களுக்கு தடுப்பு ஏற்படுத்திய பின், மீண்டும் மின் இணைப்பு வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி