ஓரிக்கை தொழிற்கூடத்திற்கு பணித்திறன் நற்சான்று விருது
காஞ்சிபுரம்,:அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், நேற்று குடியரசு தின விழா நடந்தது. இதில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள ஆறு மண்டலங்களில் உள்ள 55 பணிமனைகளில், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கை மத்திய தொழிற்கூடத்தில் பணிபுரியும் தகுதிசான்று பிரிவு மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணித்திறன் நற்சான்று விருது வழங்கப்பட்டது. மண்டல பொது மேலாளர் தட்சணாமூர்த்தி விருது மற்றும் சான்றிழ் வழங்கி பாராட்டினார்.இதுகுறித்து கருணாகரன் கூறியதாவது:உத்திரமேரூர் பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்தபோது, கடந்த 2019 லோக்சபா தேர்தலன்று, தமிழகத்திலேயே, 133 சதவீதம் பேருந்து இயக்கப்பட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தல் அன்று, 100 சதவீதம் ஊழியர்கள் ஒட்டளித்ததோடு, 122 சதவீதம் பேருந்துகளும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 115 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன.கடந்த 2022ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என, தொடர் விடுமுறையில், 370 சதவீதம் இயக்கப்பட்டது. தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், 2019ம் ஆண்டு முதல், 2021 வரை என, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பேருந்து இயக்க காலத்தில், அனைத்து பேருந்துகளையும் இயக்கியதற்காக பணித்திறன் நற்சான்றிழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. தற்போது, ஓரிக்கை தொழிற்கூடத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.