/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் ஒரகடத்தில் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார், மார்ச் 22-ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து கழிவை ஏற்றி செல்லும் வாகனங்கள் அளவிற்கு அதிகமாக பாரத்தை ஏற்றி சென்று வருகின்றன.வாகனத்தின் உயரத்தை விட, உயரம் அதிகமாக, அளவிற்கு அதிகமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்து அவை, சரிந்து விழுவதால், அவ்வழியாக வரும் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்து ஏற்படும் விதமாக, அளவிற்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.